மது அருந்துவதால் ஏற்படும் விளைவுகள்?

இது விந்தணுவின் ஆரோக்கியம் மற்றும் தாம்பத்தியத்தின் செயல்பாட்டில் பாதிப்பை ஏற்படுத்தும். கீழ்கண்ட வழிகளில் ஆண்மை குறைபாட்டிற்கு வழிவகுக்கும்:

விந்தணுவின் தரம்:

பல வழிகளில் விந்தணு சேதப்படும். குறிப்பாக அதன் வடிவம் மற்றும் கருத்தரிப்புக்கான முன்னேறிச்செல்லும் வேகத்தை பாதிக்கும்.

மதுவிலுள்ள நச்சு உடலுக்குள் ஊடுருவி விந்தணுவின் DNA வை பாதிக்கும். இது கருமுட்டைக்குள் விந்தணு ஊடுருவி கருவுருவாவதை பாதிக்கும்.

ஹார்மோன் அளவுகள்:

மது அருந்துவது உடலிலுள்ள சீராக இயங்கவேண்டிய ஹார்மோன், குறிப்பாக டெஸ்டோஸ்டெரோன் – விந்து உற்பத்திக்கான ஹர்மோனேனில் ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கும். குறைந்த டெஸ்டோஸ்டெரோன் விந்தணு உற்பத்தியை குறைப்பதோடு மட்டுமல்லாமல் உடலுறவில் பாதிக்கும். அதிக நாட்கள் மதுவிற்கு அடிமையாக இருந்தால் ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படுத்தும். அதுமட்டுமல்லாமல் பழக்கத்திலிருந்து விடுபட்டாலும் பழைய நிலைக்கு வர அதிக நாட்கள் எடுக்கும்.

உடலுறவு செயல்திறன்

அதிகமாக குடிப்பதால் உடனடி மற்றும் நீண்ட கால பாதிப்புகள் உடலுறவு கொள்வதில் இருக்கும். மது அருந்துவதால் விரைவில் விறைப்புத்தன்மை குறைபாடு ஏற்பட வாய்ப்புள்ளது. காலபோக்கில் இந்த பழக்கத்தினால் விறைப்புத்தன்மையை இழக்க நேரிடும். இது உடல் ரீதியாக மட்டுமல்லாமல் மனரீதியான அழுத்தத்தை உருவாக்கி பாலியல் உணர்ச்சி குறைந்து குழந்தையின்மை மற்றும் பாலியல் ஆரோக்கியத்தை குறைக்கும்.

இனப்பெருக்க ஆரோக்கியத்தை குறித்த ஒரு மேற்பார்வை:

மது, கருவுருவாவது மட்டுமல்லாமல் கல்லீரலையும் பாதிப்பதால், சீரான ஹார்மோன் சுரப்பது மற்றும் பொதுவான உடல்நலத்தையும் பாதிக்கும். குழந்தை பெறுவதற்கு ஆரோக்கியமான கல்லீரலின் சீரான செயல்பாடு மற்றும் அதன் உடலிலுள்ள நச்சுக்களை வடிகட்டுவது மிகமுக்கியம்.

CTA

மதுஅருந்துவதின் அளவென்ன?

அதாவது ஒரு நாள் குடித்தால் பரவாயில்லை ஆனால் அதிகமாக குடிப்பதினால் குழந்தை பெறுவதில் சிக்கல் உண்டாகும். அதிகமாக குடிப்பவர்களின் விந்தணு எண்ணிக்கை குடிப்பழக்கம் இல்லாதவர்களைவிட குறைவாகும் வேகம் குறைவாகவும் இருப்பதாக ஒரு ஆய்வினால் பரிந்துரைக்கப்பட்டது.

புகை பழக்கம் எவ்வாறு கருவுறுதலை பாதிக்கும்?

வாழ்க்கைமுறையில் புகைபிடிப்பது கருவுறுதலுக்கு கீழ்கண்டவாறு மிகுந்த கேடு விளைவிக்கும்:

விந்தணு வேகம் மற்றும் வடிவம்:

புகைபிடித்தல் விந்தணுவை மெதுவாகவும் சோம்பலுடனும் கருமுட்டையை சென்றடைய முடியாத அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். அது விந்தணுவின் DNA வை பழுதாக்குவதன் மூலம் குழந்தை உருவாவதில் பிரச்சனைகள் வரலாம்.

ஹார்மோன் செயல்பாட்டிற்கு இடையூறு:

சிகரெட்டிலுள்ள நிகோடின் மற்றும் பிற இரசாயனங்கள், விந்தணு உற்பத்தியில் உதவும் ஹார்மோன்களுக்கு இடையூறாக இருக்கும்.

புகைபிடித்தல் நேரடியாக விந்தணுக்களை மட்டுமே தாக்காமல் அது ஆணின் இனப்பெருக்க அமைப்பையும் சேதப்படுத்துவதால் விந்தணுக்களின் எண்ணிக்கை குறையும்.

இந்த இரு பழக்கத்தையும் உள்ளவர்களின் தாம்பத்யதில் ஏற்படும் பாதிப்புகள்

அவர்கள் தாம்பத்திய வாழ்வின் ஆரோக்கியம் பாதிக்கப்படும். இது குழந்தை பெறுவது மட்டுமல்லாமல், பாலியல் உறவிலும் மகிழ்ச்சியும் திருப்தியையும் தராது.

விறைப்புத்தன்மை குறைபாடு:

அதிகப்படியான புகை மற்றும் மது அருந்துவது ரத்த நாளங்களை பாதித்து அதன்மூலம் விரைக்கு செல்லும் ரத்தஓட்டம் குறைவதால் உடலுறவின்போது விறைப்புத்தன்மை நேரம் குறையும். மது அருந்துதல் சிற்றின்பத்தை ஊக்குவித்து சிறிய நேரத்திற்கு உதவும். காலபோக்கில் புகைப்பதால் ரத்தக்குழாய் பாதிப்படைவது மட்டுமல்லாது விறைப்புத்தன்மை குறைபாடும் நெடுங்கால பிரச்சனையாக தொடரும்.

உடலுறவின்மீது நாட்டம் குறைதல்:

அதிகமாக புகை மற்றும் மதுஅருந்துவதால் டெஸ்டோஸ்டெரோன் அளவு குறையும். இதன்காரணமாக உடலுறவில் நாட்டம் குறையும். நிகோடின் மற்றும் மது டெஸ்டோஸ்டெரோன் ஹார்மோன் சுரப்பதற்கு இடையூர்செய்து இதன் மூலம் உடலுறவின் மீதுள்ள நாட்டத்தை குறைக்கும். இதனால் கணவன் மனைவி இடையே உடலுறவில் அதிகமாக சேர முடியாததால் குழந்தை பெறுவதில் சிக்கல் ஏற்படுகிறது.

கருத்தரிப்பில் விந்தணுவின் தாக்கம்: மது மற்றும் புகையை முற்றிலுமாக நிறுத்தல் அல்லது அதிக அளவில் குறைப்பதன் மூலம் விந்தணுவின் தரத்தை உயர்த்தவும் விறைப்புத்தன்மையையும் மீட்டெடுக்க முடியும்.

மது மற்றும் புகை விந்தணுவுக்கு தீமை விளைவிக்கும். ஒருபுறம் மது விந்தின் வடிவம் மற்றும் வேகத்தை பாதிக்கும். மறுபுறம், புகை DNA வை துண்டாடும். இவையிரண்டும் சேர்ந்து ஆரோக்கியமான கருவுறுதலை தடுக்கும். இவைகளில் இருக்கும் நச்சு ஹார்மோன் சிரோட்டத்தை பாதிப்பதோடு மட்டுமல்லாமல் ஆண் மலட்டுத்தன்மையும் அதிகரிக்கும்.

ஆரோக்கியமான கருத்தரிப்புக்கான செய்ய வேண்டிய மாற்றங்கள்:

ஆண்கள் தங்கள் வாரிசுக்காகவும் ஆரோக்கியமான தாம்பத்ய உறவுக்காகவும் தங்கள் வழக்கை முறையில் மாற்றங்கள் செய்வது மிக அவசியம்.

நடைமுறைக்கு உகந்த சில வழிமுறைகளை கீழ் காண்போம்:

நிறுத்து அல்லது குறை:

மது மற்றும் புகையை மொத்தமாக நிறுத்தினாலோ அல்லது அதிகப்படியாக குறைந்தாலோ விறைப்புத்தன்மை மற்றும் விந்தணுவின் தன்மை மேம்படும்.

சுகாதார கண்காணிப்பு

சீரான இடைவேளையில் உடல் சுகாதாரத்தை சரிபார்த்து வாழ்க்கைமுறையில் மாற்றங்களால் ஏற்படும் குறைகளை சரி செய்து குழந்தைபிறப்புக்கு உதவும் அங்கங்களை சீராக இயங்கச்செய்யவேண்டும்.

உணவு மற்றும் உடற்பயிற்சி

சத்தான உணவு மற்றும் சீரான உடற்பயிற்சி மூலம் ரத்த ஓட்டம் மற்றும் ஹார்மோன் அளவுகளை மேம்படுத்தி பொது சுகாதாரம் மற்றும் ஆரோக்கியமான கருத்தரிப்பிற்கும் வழிவகுக்கும்.

முடிவாக

மது மற்றும் புகை இரண்டுமே குழந்தை பேரு மற்றும் தாம்பத்யத்தை கெடுக்கும். இவை விந்தணுவின் அரோக்கியம், ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் மற்றும் தாம்பத்தியத்தின் இன்பங்களை சீர்குலைக்கும். அதிஷ்டவசமாக இந்த பழக்கங்களை விட்டுவிட்டால் இந்நிலையை மாற்ற முடியும். தங்ககளுடைய குழந்தை கனவை நினைவாக்க முயற்சிக்கும் ஆண்களுக்கு இந்த வாழ்க்கைமுறை மாற்றங்கள் புதிய ஆரம்பத்தை தரும்.

உங்கள் குழந்தை கனவோ அல்லது தாம்பத்தியத்தில் பிரச்சனைகள் இருந்தால் உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது. அவர்கள் உங்கள் தேவைக்கேற்ப அறிவுரைகளை தந்து உதவுவார்கள். இந்த அறிவுரைகள் உங்கள் சிறந்த ஆரோக்கியத்திற்கும் சந்தோஷமான குடும்ப வாழ்க்கைக்கும் பெரிதும் உதவும்.

Book an Appointment

FAQs

1. மது அருந்துவதால் ஆண் மலட்டுத்தன்மை உண்டாகுமா

ஆம், உண்டாக்கும். அது ஹார்மோன் அளவுகள், குறிப்பாக டெஸ்டோஸ்டெரோனை பாதித்து அதன்மூலம் விந்தின் தரத்தை பாதிக்கும். இது மலட்டுத்தன்மையை உண்டாக்கும்.

2. புகை பிடிப்பதால் ஆண் மலட்டுத்தன்மை உண்டாகுமா?

ஆம், உண்டாக்கும். அது DNA வை சீர்குலைத்து விந்தணுவின் வீரியம் மற்றும் அளவை குறைத்து சீரான ஹார்மோன் உற்பத்தியை பாதிப்பதோடு மட்டுமல்லாமல் ஆண் மலட்டுத்தன்மையும் உண்டாக்கும்.

3. குழந்தைக்காக முயற்சிக்கும்போது மது அருந்தலாமா

குறைத்த அளவில் மது அருந்தினால் பாதிப்பு இல்லையென்றாலும்,ஒருஅரோக்கியமான குழந்தைக்காகவும், நல்ல விந்தணுக்காகவும், நல்ல ஆரோக்யத்திற்காகவும் விட்டுக்கொடுக்கலாமே.

4. எனது கணவன் புகைப்பிடித்தால் நான் கர்ப்பமாக முடியுமா?

ஆம், கண்டிப்பாக முடியும். ஆனாலும் உங்கள் கணவரின் விந்தின் தரம் குறைவதால் கரு உருவாவதில் சிரமங்கள் ஏற்படவும் கர்ப்பகாலம் மற்றும் குழந்தையின் ஆரோக்கியத்தையும் பாதிக்கலாம்.

5. புகைபிடித்தல் விந்தனுக்களை அழிந்துவிடுமா?

இல்லை, ஆனால் குறிப்பிடத்தக்கவகையில் வீரியத்தில், அமைப்பில் மற்றும் DNA வில் பாதிப்பை உண்டாக்கி மலட்டுத்தன்மையை ஏற்படுத்தும்.

6. ஒரு நாளைக்கு ஓர் சிகெரெட் புகைத்தால் பாதிப்பு உண்டாகுமா?

ஆம், அதிலுள்ள நச்சு தன்மை விந்தணுவின் தரத்தை பாதிப்பதோடு ஒட்டுமொத்த இனப்பெருக்க அமைப்பையும் பாதிக்கும்.

7. மது பழக்கத்தை கைவிட்டால் எத்தனை நாட்களில் விந்தணு தரம் உயரும்?

பழக்கத்தை விட்ட மூன்றாம் மாதத்திலிருந்து ஒருவரது உடல் பழைய நிலைக்கு மாற துவங்கும் போது விந்தணுவின் எண்ணிக்கை உயர ஆரம்பிக்கும்.