செயற்கை முறை கருத்தரிப்பு (IVF) என்றால் என்ன? அதற்கும் இரட்டை குழந்தைகளுக்கும் என்ன தொடர்பு?

செயற்கை முறை கருத்தரிப்பு முறைகளில் ஒன்று தான் (IVF). இது கருத்தரிக்க உதவும். இந்த ஆய்வுகூடத்தில் சினைப்பையில் இருந்து எடுக்கப்பட்ட நன்கு முதிர்ச்சியடைந்த கருமுட்டைகளுடன் ஆரோக்கியமான விந்தணுக்களை சேர்த்து கருக்கள் உருவாக்கப்படுகிறது. இவ்வாறு உருவான கருக்களில் ஒன்று அல்லது இரண்டு கருக்களை கர்பப்பையினுள் செலுத்தப்படுகின்றன. ஒரு சுழட்சி முறை சிகிச்சை பெற குறைந்தது மூன்று வாரங்கள் ஆகும்.

இயற்கையாக கருத்தரித்தால் இரட்டையர் பிறப்பது அரிது. ஆனால் IVF முறையில் கணிசமாக இரட்டையர் வாய்ப்பு அதிகம். பல்வேரு அறிக்கைகளில் IVF மூலமாக 25 % முதல் 30 % தம்பதியார் இரட்டையர்களை பெற்றுள்ளனர். இதற்கான பல்வேறு காரணங்களை பின்பாக ஆலோசிப்போம்.

CTA

ஏன் IVF முறையில் இரட்டை குழந்தைகள் அதிகம் பிறக்கிறார்கள்?

இதற்கான அடிப்படை காரணம் கர்பப்பையினுள் ஒன்றுக்கும் மேற்பட்ட கருக்களை கர்ப்பம்தரிப்பதற்கு ஏதுவாக செலுத்தும்போது, கர்ப்பம்தரிக்க வாய்ப்புகள் அதிகரிப்பது மட்டுமல்லாது ஒன்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் (இரட்டையர் உட்பட) உருவாக வாய்ப்புள்ளது.

IVF ல் இரட்டை குழந்தைகள் இரண்டு வகை:

மோனோசைகோடிக் இரட்டையர் (ஒரேமாதிரி இருக்கும் இரட்டையர்கள்) – இது ஒரு கருவில் உருவாகும் இரண்டு குழந்தைகள். இது அபூர்வம்.

டிஸ்ய்கொடிக் இரட்டையர் – (இரண்டு கருக்களில் உருவாகும் இரட்டையர்கள்) – இரண்டு கருக்களிலும் கருவறையில் ஊன்றி குழந்தைகளாக வளரும்.

IVF ல் இரட்டை குழந்தைகள் உருவாக அமையும் காரணங்கள்:

இந்த காரணங்களை பெற்றோருக்கு புரிதல் மிக அவசியம்.

சில காரணங்களை கீழே கான்போம்:

கர்பப்பையினுள் செலுத்தப்பட்ட கருக்கள் எண்ணிக்கை

இது மிக முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்தும். ஒன்றுக்கும் மேற்பட்ட கருவை செலுத்தும்போது, இரட்டையர் உருவாக்க வாய்ப்பு அதிகரிக்கிறது. இருந்தாலும், ஒன்றுக்கும் மேற்பட்ட குருவுருவாவதால் ஏற்படும் சுகாதார அபாயங்களால், சமீப காலங்களில் ஒரு கரு மாத்திரம் செலுத்தும் முறை பின்பற்றப்படுகிறது.

பெண்ணின் வயது

இரட்டை குழந்தைக்கு பெண்ணின் வயது முக்கிய பங்கு வகிக்கிறது. வயது முதிர்வினால் கருமுட்டையின் தரம் பாதிக்க வாய்ப்புள்ளது. தரம் வாய்ந்த ஆய்வகத்தில் உருவாக்கப்பெற்ற கருக்கள் மூலம் இரட்டை குழந்தைக்கு வாய்ப்பு உள்ளது.

கருத்தரிப்பு ஊக்க மருந்து:

சினை பையிலுள்ள கருமுட்டையின் வளர்ச்சியை ஊக்குவிக்க கொடுக்கப்படும் மருந்தின் மூலம் அதிக கருமுட்டைகள் உருவாகலாம். இந்த முட்டைகளை கருவாக்கினால் அதிகமான கருவுருவாக வாய்ப்புள்ளது. இந்த கருக்களை ஒன்றுக்கு மேலாக கருவறைக்குள் செலுத்தினால் இரட்டை குழந்தைகள் கருத்தரிக்க வாய்ப்புள்ளது.

மரபணு காரணங்கள்:

மனைவியின் குடும்பத்தில் இரட்டையர் பிறந்த சரித்திரம் இருந்தால் இரட்டை குழந்தைகள் பிறக்க அதிக வாய்ப்புள்ளது. இயற்கையாக கருத்தரிப்பது போலவே, IVF யிலும் இரட்டை குழந்தைகள் பிறக்க வாய்ப்புள்ளது.

IVF மூலம் இரட்டை குழந்தைகள் பெற்றுக்கொள்வதின் பலன்கள்:

இரட்டையர் பெற்றுக்கொள்வதன் மூலம் குடும்பங்களுக்கு அநேக நன்மைகள் உண்டு. அவற்றில் சிலவற்றை கீழ் காண்போம்:

ஒரே நேரத்தில் ஏற்படும் குடும்ப வளர்ச்சி: அதிக குழந்தைகள் வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கும் குடும்பங்களுக்கு ஒரே நேரத்தில் இரண்டு குழந்தைகள் கிடைப்பதால் இது நன்மையாக கருதப்படுகிறது.

பொருளாதார சிக்கனம்: பொதுவாகவே IVF ஆகும் செலவை கருதிக்கொண்டு பார்க்கும்போது, இரட்டையர்கள் பிறப்பது, சிக்கனத்திற்கு வழிவகுக்கும். இதனால் நேரம் மற்றும் செலவு மிச்சமாகும்.

இரண்டு குழந்தைகளும் ஒன்றாக பயணிக்கும் வாய்ப்பு: இரு குழந்தைகளுக்கும் ஒரு தனித்துவ இணைப்பு ஏற்படும். ஏனென்றால் இருவரும் ஒன்றாக வளர்ந்து ஒவ்வொரு முன்னேற்றத்தையும் ஒன்றாகவே அடைந்து ஒருவருடைய வளர்ச்சியில் உறுதுணையாகவும் இருக்கும்.

எதிர்கொள்ள வேண்டிய அபாயங்கள்:

இரட்டை குழந்தைகள் பெற்றுக்கொள்வது என்பது கேட்பதற்கு நன்றாக இருந்தாலும், கர்ப்ப காலத்தில் கீழே கூறப்பட்டுள்ள சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்:

Pre -Eclampsia (உயர் ரத்த அழுத்தம்) : கர்ப்ப காலத்தின் போது உயர் ரத்த அழுத்தம் ஏற்பட்டு அதன் மூலமாக வீக்கம் ஏற்படும்.

Gestational Diabetes (நீரிழிவுநோய்) : இந்நோய் கர்ப்பகாலத்தில் முதல்முறையாக கண்டுபிடிக்கப்படும். இதன் மூலமாக தாய் மற்றும் குழந்தை இருவரும் பாதிக்கப்படலாம்.

Premature Birth (36 வாரத்திற்கு முன்பாகவே குழந்தை பிறப்பு): இதனால் எடை குறைவாக இருத்தல் மற்றும் வளர்ச்சியில் பிரச்சனைகள் வரலாம்.

Cesarean Section (அறுவை சிகிச்சையின் மூலம் பிரசவம்): இந்த முறையில் அதிகமாக இரட்டை குழந்தை பிரசவம் பார்க்கப்படுகிறது.

Twin -Twin Transfusion Syndrome (TTTS) – ஒரே தொப்புள் கொடியில் உருவாகும் இரட்டையர்கள் இந்த நிலையினால் பாதிக்கப்படுவார்கள். இதில் ஏதாவது ஒரு குழந்தைக்கு ரத்த நாளங்கள் சரியாக இயங்காது.

முடிவாக

செயற்கை முறை கருத்தரிப்பு (IVF) மூலமாக இரட்டை குழந்தைகள் பெற்றுக்கொள்வதில் அதற்கே உரித்தான நன்மைதீமைகள் உண்டு.

இயர்கையாக கருத்தரிப்பதை விட IVF முறையின் மூலம் இரட்டையர் அதிகம் வர வாய்ப்புள்ளது. இந்த முடிவெடுப்பதற்குள் தம்பதியர் உங்கள் கருத்தரிப்பு மருத்துவரிடம் தெளிவாக ஆலோசனை பெற்ற பின்னரே முடிவெடுக்க வேண்டும்.

அது மட்டுமல்லாமல் இந்த முடிவு தாயின்ஆரோக்கியம், அவரது எண்ணங்கள் மற்றும் மருத்துவரின் ஆலோசனையின் பேரிலேயே எடுக்கவேண்டும்.

Book an Appointment

FAQs

1. IVF முறையில் இரட்டை குழந்தைகள் தேர்வு செய்யலாமா?

தேர்வு செய்வது என்பது கடினம் என்றாலும், ஒரு கருவிற்கு மேலே கர்பப்பையினுள் செலுத்தும் போது இரட்டையருக்கு வாய்ப்புள்ளது. என்றாலும், ஒரு கருவுக்கு மேலே கர்பப்பையினுள் செலுத்துவதற்கு தாயின் ஆரோக்கியம், அவரின் மனநலன் மற்றும் மருத்துவரின் ஆலோசனை ஆகியவற்றின் பெயரிலேயே முடிவெடுக்கப்படும்.

2. ஒரே கருவில் இரட்டை குழந்தை உருவாகுமா?

ஆம். ஆனால் வாய்ப்புகள் குறைவு. இயற்கை கருத்தரிப்பு போலவே IVF யிலும் ஒரேமாதிரியான இரட்டையர்கள் பிறக்க வாய்ப்புள்ளது

3. IVF இரட்டை குழந்தைகள் குறித்த காலத்திற்கு முன்பாக பிறக்கிறதா?

ஆம், ஒரு குழந்தையை விட இரட்டையர்கள் குறித்த காலத்திற்கு முன்பாகவே பிறக்கின்றனர்.

4. IVF மூலமாக எத்தனை இரட்டையர்கள் உருவாகிறார்கள்?

சராசரியாக 30 % பேர் IVF மூலம் கருத்தரிக்கிறார்கள். பெண்ணின் கருப்பையினுள் செலுத்தப்படும் கருவை வைத்து தான் இது தீர்மானிக்கப்படுகிறது. இன்றய சூழ்நிலையில், அதிகமான மருத்துவமனைகள் ஒரு முறைக்கு ஒரு கருமட்டுமே செலுத்தும் கொள்கையை கடைபிடிக்கிறார்கள்.

5. IVF முறையில் கருத்தரித்தால் பிரசவம் முழு கர்ப்பகாலம் முடிந்து நடக்குமா?

இயற்கையாக கருவுற்ற குழந்தைகளை விட IVF குழந்தைகள், குறிப்பாக இரட்டையர்கள் கர்ப்பகாலம் முடிவதற்கு முன்பே பிறக்கின்றன.