உடல் பருமன் மலட்டுத்தன்மையை ஏற்படுத்துமா?

ஆம், உடல் பருமன் ஆண், பெண் இருபாலரின் கருவுறுதலை கடுமையாக பாதிக்கிறது. உடல் பருமன் மற்றும் குறைந்துள்ள  கருவுறுதல் விகிதங்களுக்கு இடையே ஒரு தெளிவான தொடர்பை பல ஆய்வுகள் காட்டுகின்றன மற்றும் அதிக உடல் எடையின் சாத்தியமான விளைவுகளை இனப்பெருக்க ஆரோக்கியத்தில் எடுத்துக்காட்டுகின்றன. பெண்களில், உடல் பருமன் ஹார்மோன் சமநிலையின்மைக்கு வழிவகுக்கும், இது மாதவிடாய் சுழற்சி மற்றும் கருமுட்டை வெளிப்படுதலை பாதிக்கிறது. அதிகப்படியான கொழுப்பு, திசுக்கள்   உற்பத்தி செய்யப்படுகிற  ஈஸ்ட்ரோஜனை சேமித்துவைத்து,  வழக்கமான கருமுட்டை வெளிவருவதற்கு  தேவையான ஹார்மோனின்  செயல்பாடுகளை  தடுக்கும். இதன் விளைவாக, உடல் பருமன் உள்ள பெண்களுக்கு  ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சியை ஏற்படும்  அல்லது கருமுட்டை வெளிப்படுதலை முற்றிலும் நிறுத்தப்பட்டு கருவுறுவது கடினமாகிவிடும். உடல் பருமன் பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் (பிசிஓஎஸ்) உடன் மிகவும் தொடர்புடையது, இது ஹார்மோன் சமநிலையின்மை, இன்சுலின் எதிர்ப்பு மற்றும் கருப்பை நீர்க்கட்டிகளால் வகைப்படுத்தப்படுகிறது. கருமுட்டை வெளிப்படுதலை  சீர்குலைப்பதன் மூலம் கருவுறுதலை மேலும் சிக்கலாக்குகிறது மற்றும் கருவுறாமை அபாயத்தை அதிகரிக்கிறது.

கூடுதலாக, உடல் பருமன் இனப்பெருக்க அமைப்பில் உள்ள  கட்டமைப்பு மற்றும் செயல்பாட்டு அசாதாரணங்களுக்கு வழிவகுக்கும். உடல் பருமனுடன் தொடர்புடைய நாள்பட்ட அழற்சியானது முட்டையின் தரம் மற்றும் கருப்பையில் கரு பொருத்தப்படுவதைப் பாதிக்கலாம் மற்றும் கருச்சிதைவு ஏற்படுவதற்கான வாய்ப்பை அதிகரிக்கும்.

ஆண்களில், உடல் பருமன்  கருவுறுதலில்  தாக்கம் ஏற்படுத்துவதோடு விந்தணுக்களின் தரம் மற்றும் அதன் அளவை   பாதிக்கிறது. அதிக உடல் கொழுப்பு சதவீதம், மோசமான வாழ்க்கை முறை பழக்கவழக்கங்கள் மற்றும் உடல் பருமனுடன் தொடர்புடைய ஹார்மோன் சமநிலையின்மை ஆகியவை விந்தணு உற்பத்தி, இயக்கம் மற்றும் உருவ அமைப்பை பாதிப்படைய செய்யலாம். பொதுவாக, பருமனான ஆண்களில் காணப்படும் குறைவான டெஸ்டோஸ்டிரோன் அளவு,  கருவுறுதல் பிரச்சினைகளை  மேலும் உருவாக்கும்.

உடல் பருமனால் கருவுறுதலில் ஏற்படும்  பாதகமான விளைவுகள் கவலைக்குரியதாக இருந்தாலும், நல்ல செய்தி என்னவென்றால், வாழ்க்கை முறை மாற்றங்கள் கருத்தரிப்பதற்கான வாய்ப்புகளை மேம்படுத்த உதவும். சீரான உணவு மற்றும் வழக்கமான உடற்பயிற்சி மூலம் ஆரோக்கியமான எடையை அடைவது மற்றும் பராமரிப்பது ஹார்மோன் சமநிலையை அடைய சாதகமாக இருக்கும்  மற்றும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் கருவுறுதலை மீட்டெடுக்கும்.

முடிவுரை

உடல் பருமன் ஹார்மோன் சமநிலையை சீர்குலைப்பதன் மூலம் இரு பாலினத்தின்  கருவுறுதலை கணிசமாக பாதிக்கிறது, பெண்களில் ஒழுங்கற்ற சுழற்சிகள் மற்றும் கருமுட்டை வெளிவருவதில்  சிக்கல்களை ஏற்படுத்துகிறது, அதே நேரத்தில் ஆண்களில் விந்தணுக்களின் தரம் மற்றும் அளவைக் குறைக்கிறது. மேலும், உடல் பருமன் நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தத்தின் அபாயத்தை அதிகரிக்கிறது, கருவுறுதல் பிரச்சனைகளை அதிகரிக்கிறது.

வெற்றிகரமாக கருத்தரிப்பதற்கான வாய்ப்புகளை மேம்படுத்த உடல் பருமனை குறைக்க செய்வது மிகவும் முக்கியமானது. குறிப்பாக நீங்கள் உடல் பருமனால் அவதிப்பட்டுக்கொண்டிருந்தால்  மற்றும் இயற்கையான முறையில் கருத்தரிப்பது குறித்த கவலைகள் இருந்தால் அனுபவம் வாய்ந்த கருத்தரிப்பு நிபுணர்களிடம் ஆலோசனையைப் பெறவும்.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

1. உடல் பருமனுடன் தொடர்புடைய குறிப்பிட்ட இனப்பெருக்க சுகாதார பிரச்சினைகள் யாவை?

பெண்களிடையே,  ஹார்மோன் சமநிலையின்மை, ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சிகள், பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் (பிசிஓஎஸ்), கருவுறுதல் விகிதம் குறைதல் மற்றும் ப்ரீக்ளாம்ப்சியா போன்ற கர்ப்ப சிக்கல்களின் அதிக ஆபத்து  போன்ற உடல் பருமனுடன் தொடர்புடைய சில உடல்நலப் பிரச்சினைகள், அதுமட்டுமல்ல ஆண்களிடையே விந்தணுவின் தரம் மற்றும் அளவு  மோசமாக பாதிக்கிறது.

  1. ஹார்மோன் அளவு மற்றும் கருமுட்டை வெளிவறுவதை உடல் பருமன் பாதிப்பதால் மலட்டுத்தன்மையை ஏற்படுத்துமா?

          ஆம், உடல் பருமன் ஹார்மோன் அளவை பாதிக்கும் மற்றும் கருமுட்டை வெளிவருவதை  தடுக்கும். அதிகப்படியான உடல் கொழுப்பு ஈஸ்ட்ரோஜன் உற்பத்தியை அதிகரிக்க வழிவகுக்கும். கருமுட்டை வெளிவருவதற்கான  தேவையான ஹார்மோன் சமநிலையில் இல்லாத காரணத்தினால், ஒழுங்கற்ற அல்லது  மாதவிடாய் சுழற்சிகள் ஏற்படாமல்  கருவுறுதல் குறைவதற்கு வழிவகுக்கும்.

  1. உடல் பருமன் கருவுறுதல் சிகிச்சையின் வெற்றியை பாதிக்குமா?  
    ஆம், உடல் பருமன் கருவுறுதல் சிகிச்சையின் வெற்றியை பாதிக்கலாம். உடல் பருமன் கருவில் கருத்தரித்தல் (IVF) போன்ற கருவுறுதல் சிகிச்சைகளின் செயல்திறனைக் குறைக்கலாம், இது குறைவான கர்ப்ப விகிதங்கள் மற்றும் கர்ப்ப சிக்கல்களுக்கு  அதிக வாய்ப்புண்டு. கருவுறுதல் சிகிச்சைக்கு முன் எடை இழப்பதன் மூலம், பருமனான நபர்களுக்கு நல்லவிளைவுகளை ஏற்படுத்தமுடியும்.
  2. பருமனான நபர்களுக்கு எடை இழப்பதன் மூலம் கருவுறுதலை மேம்படுத்த முடியுமா?

ஆம், உடல் பருமனான நபர்களுக்கு எடை இழப்பு கருவுறுதலை மேம்படுத்தும். ஆரோக்கியமான உணவு மற்றும் வழக்கமான உடற்பயிற்சி மூலம் உடல் எடையை குறைப்பது ஹார்மோன் சமநிலையை மீட்டெடுக்கவும், கருமுட்டை வெளிவறுவதை  மேம்படுத்தவும், கருத்தரிப்பதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கவும் உதவும். எடை இழப்பு IVF போன்ற கருவுறுதல் சிகிச்சைகளின் செயல்திறனை அதிகரிக்கிறது, கர்ப்ப விகிதத்தை மேம்படுத்துகிறது மற்றும் கர்ப்ப சிக்கல்களைக் குறைக்கிறது. பாதுகாப்பான மற்றும் பயனுள்ள எடை இழப்பு உத்திகள் குறித்த வழிகாட்டுதலுக்கு ஒரு சுகாதார நிபுணருடன் கலந்தாலோசிப்பது அவசியம்.

  1. பருமனான நபர்களுக்கு ஏதேனும் குறிப்பிட்ட கருத்தரிப்பு சிகிச்சைகள் அல்லது பரிசீலனைகள் உள்ளதா?

        பருமனான நபர்களுக்கு  கருவுறுதல் சிகிச்சைகள், எடை மேலாண்மை திட்டங்கள் மற்றும் IVF போன்ற நடைமுறைகளுக்கான சாத்தியமான எடை கட்டுப்பாடுகள் போன்ற குறிப்பிட்ட பரிசீலனைகள் இருக்கலாம். அனுபவம் வாய்ந்த கருவுறுதல் நிபுணரிடம் இவை விவாதிக்கப்பட வேண்டும்.